“புத்தம் புது காலை” படத்தில் நான் இப்படித்தான் இருப்பேன்!! புகைப்படத்தை பதிவிட்டு இணையதளத்தை தெறிக்கவிட்ட ஆண்ட்ரியா!!

0

putham puthu kalai anthology movie jeremiah acting in this look photos viral: இந்த லாக்டவுன் சமயத்தில் பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து பல அந்தோலஜி திரைப்படங்களை எடுத்து உள்ளனர். கொரோனா காரணமாக சில மாதங்களாகவே திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி அமேசான் ஓடிடி யில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ்மேனன், சுகாசினி, மணிரத்தினம், கௌதம்மேனன், சுதா கொங்கரா போன்ற ஐந்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் புத்தம் புது காலை.

இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா சாதனா என்கின்ற கதாபாத்திரத்தில் எந்த லுக்கில் தான் இருப்பார் என தற்போது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயராம் காளிதாஸ், கல்யாணி பிரியதர்ஷன், ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, எம்எஸ் பாஸ்கர், அனுஹாசன், சுகாசினி, பாபிசிம்ஹா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த புத்தம் புது காலை என்கின்ற படத்தில் ஒரு பிரிவை இயக்குனர் ராஜீவ்மேனன் அவர்கள் இயக்கிய பிரிவில் ஆண்ட்ரியா அவர்கள் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் துருதுருவென இருப்பதுபோன்ற அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளதாகவும் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவர் சாதனா என்கின்ற கதாபாத்திரத்தில் எப்படி இருப்பார் என்கின்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

therealandreajeremiah_12
therealandreajeremiah_12
andrea jera2
andrea jera2