ரஜினிக்கு வில்லனாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட புஷ்பா பட நடிகர்.? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்

0
jailar
jailar

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் விஜய் கமல் போன்றவர்கள் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் மற்ற முன்னணி நடிகர்களும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். குறிப்பாக நம்பர் ஒன் ஹீரோ என்ற பட்டத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹிட் கொடுக்க  வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்.

அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் காட்சிகள் அனைத்தும் ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாகவே உருவாகி வருகிறது ஏற்கனவே இந்த திரைப்படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து..

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், கன்னட டாப் நடிகர் சிவராஜ்குமார் போன்றவர்கள் நடித்து வந்த நிலையில் இன்னும் சில சூப்பர் ஸ்டார் களை இறக்கி உள்ளார் நெல்சன். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் களம் இறக்கினார். அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உருமாறி உள்ள சுனில்

தற்பொழுது ஜெயிலர் படத்தில் இழுத்து போட்டு உள்ளார் சுனில் கடைசியாக புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்க சுனில் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் தகவல்கள் கசிந்து உள்ளது

அதன்படி நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் நடிக்க சுமார் 2 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டுள்ளாராம். இருப்பினும் படத்தின் கதைக்கு சுனில் தேவை என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் படகுழு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் படக்குழு சைடுல இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை.