புஷ்பா 2 வில் அந்த காட்சிகள் இருக்காது.! வெளியான அப்டேட்டால் ஷாக்கான ரசிகர்கள்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்திலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் படக்குழு விரைவில் புஷ்பா 2 படத்தின் அப்டேடை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு தகவலால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தன்னா நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தன்னா ஆகிய இருவரும் காதலிப்பதாக காட்சிகள் இருக்கும்.

அதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் இவர்கள் இருவரும் திருமணம் ஆகி இருப்பார்கள் அதனால் எதிரிகள் டீம் ரஷ்மிகா மந்தனாவை ஆரம்பத்திலேயே கொன்று விடுவார்கள் ஆகையால் புஷ்பா 2 வில் ராஷ்மிகா மந்தாராவின் காட்சிகள் அதிகம் இடம்பெறாது என்று கூறியுள்ளனர். இதனால் தான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறபடுகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ரஷ்ம்கா. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுவந்தாலும் வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இருந்தாலும் விஜய்க்காக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து புஷ்பா 2-வீலும் இவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இருக்காவிட்டால் ராஷ்மிகாவின் நிலைமை என்ன ஆவது என்று புலம்பி வருகிறார்கள் அவர் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையான தகவலாக வெளியாகவில்லை இது வதந்தியாக இருக்கலாம் என்று கூறபடுகிறது.

Leave a Comment