ரிலீஸ்க்கு முன்பே 1000 கோடி விலை போன புஷ்பா 2.. ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..

pushpa
pushpa

Pushpa 2 Movie: தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே 1000 கோடி ரூபாய் விலை போய் விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

வசூலிலும் பட்டையை கிளப்பிய நிலையில் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. எனவே புஷ்பா படத்தின் வெற்றியினை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தற்பொழுது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்ச அளவில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்டு மைன் என்ற இந்தி மொழி தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்திருப்பதாக புதிய தகவல் வெளியாக இருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இதுவரையிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. எனவே புஷ்பா 2 பட குழுவினர்கள் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த வருகின்றனர். கண்டிப்பாக முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் செம மாசாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.