பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது அந்த வகையில் பாகுபலி பாகுபலி 2 திரைப்படத்தை தொடர்ந்து மிக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் புஷ்பா இந்த திரைப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களம் செம்மர கடத்தலை மையமாக வைத்தே இந்த படம் உருவாகி இருந்தது.
இந்த படத்தில் புஷ்பா என்கின்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் வேற லெவலில் நடித்திருந்தார். ஸ்ரீ வில்லி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக மிரட்டி இருந்தார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். படமும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்சன் சென்டிமெண்ட் கலந்து இருந்ததால் ரசிகர்களை தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது தமிழகத்தில் சொல்லவே வேண்டாம் தாறுமாறான ஹிட் அடித்தது. தமிழகத்தில் மட்டுமே புஷ்பா திரைப்படமும் 25 கோடிக்கு மேல் வசூல் செய்தது ஹிந்தியில் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஆகமொத்தம் வசூலில் எந்த குறையும் வைக்காமல் 350 கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் உடனடியாக எடுக்கப்பட ஆரம்பித்தாலும் பல்வேறு தடைகளை சந்தித்ததால் வேறு வழியில்லாமல் படத்தின் ஷூட்டிங் தற்போது தள்ளிக்கொண்டே போகிறது. ஆனால் மிக விரைவிலேயே படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.
புஷ்பா திரைப்படத்தை விட அதன் இரண்டாவது பாகம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இருக்கிறதாம் இந்த படத்திற்காக தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது அல்லு அர்ஜுனுக்கு மூன்று மடங்கு சம்பளம் அதிகமாகபட இருப்பதாக கூறப்படுகிறது அதேபோல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.