உலகமே காத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படத்துடன் மல்லுக்கட்ட போகும் புஷ்பா 2..! இதெல்லாம் இவங்களுக்கு தேவையா..?

0
pushpaa
pushpaa

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சுகுமார் இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியானது மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது இந்நிலையில் இந்த திரைப்படம் சுமார் 350 கோடிக்கு மேலாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது பலரையும் வாய் பிளக்க வைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிடலாம் என பட குழுவினார்கள் முடிவு செய்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வெளியாகும் அதே  நேரத்தில் உலகப் புகழ்பெற்ற அவதார்  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் இந்த இரண்டு திரைப்படத்தில் எவை மாபெரும் வெற்றி பெறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அவதார் திரைப்படம் ஆனது மிக பிரம்மாண்டமான அனிமேஷன் மூலம் இயக்கப்படும் திரைப்படமாகும் அந்த வகையில் இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல புஷ்பா திரைப்படம் அவர்களுக்கு பஞ்சம் கிடையாது ஏனெனில்  அல்லு அர்ஜுன் தன்னுடைய வெறித்தனமான நடிப்பை இந்த திரைப்படத்தில் காட்டி இருந்தார்.

மேலும் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் கண்டிப்பாக கதை சரியாக இல்லை என்றாலும் ரசிகர்கள் அதனை பார்த்தே தீர வேண்டும் என முடிவில் இருக்கிறார்கள். ஆக மொத்தம் சரியான போட்டி இருக்கிறது.