தனது மகள் மற்றும் மருமகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பூர்ணிமா பாக்கியராஜ்.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்..

பொதுவாக வெள்ளித்திரையில் நடித்த பல நடிகர், நடிகைகள் இறுதி காலகட்டத்தில் சின்னத்திரையில் ஏதாவது ஒரு சீரியலில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளவர் தான் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ்.

இவர் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூரிய வம்சம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சொந்தமாக தொழில் ஒன்று தொடங்கிய அதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறமையினால் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இவர் முதன்முதலில் மலையாளத் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.பிறகு தான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார்.

பிறகு தான் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவருடைய மகன் தான் சாந்தனு தற்போது திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்  பூர்ணிமா தனது மகள் மற்றும் மருமகள் உடன் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

boornima
boornima

Leave a Comment