என்னிடம் கூறாமலேயே கமல் எனக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து விட்டார்.! 34 வருடங்களுக்கு பிறகு சர்ச்சையை சந்திக்கும் முத்தக்காட்சி

புன்னகை மன்னன் திரைப்படத்தில் முத்தக் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது இதுகுறித்து நடிகை ரேகா பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகிய படம் புன்னகை மன்னன் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ரேகா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் 1986 ஆம் ஆண்டு வெளியாகியது, படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல் இன்னும் பலரின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது, அந்த பாடலில் சில முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும், இந்த திரைப்படத்தில் கதையின்படி காதலர்களாக இருக்கும் கமலஹாசன் மற்றும் ரேகா இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து மலையிலிருந்து கீழே குதிக்கும் நேரத்தில் உதட்டில் முத்தமிடுவார் கமலஹாசன்.

அந்த முத்தம் தான் தற்போது சர்ச்சையை சந்தித்துள்ளது, ரேகா முன்பு ஒரு பேட்டியில் கூறுகையில் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது, தற்கொலை செய்து கொள்ளும் போது கண்ணை திறப்பாரா என்று பாலசந்தர் என்னிடம் கேட்டார் கமலஹாசனை பார்த்து நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என்று பாலசந்தர் கேட்டார். நான் கண்ணை மூடிக்கொண்டு கீழே குதிப்பதற்கு முன்பு கமல் எனக்கு முத்தமிடுவார்.

ஆனால் அதற்கு இதை என் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார் என கூறினேன் படத்தில் பணியாற்றிய சுரேஷ்கிருஷ்ணா முத்தக்காட்சி ஆபாசமான காட்சியாக இருக்காது என கூறினார் ஆனால் என் அம்மாவிடம் நான் கூறும் பொழுது என்னை ஏமாற்றும் முத்தகாட்சி எடுத்து விட்டதாக கூறினேன், இந்த முத்தக்காட்சி பற்றி நிறைய பேட்டிகளில் நான் கூறியுள்ளேன்.

அதனால் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் கமலஹாசன் அவர்களுக்கு என் மீது கோபமாக இருக்கலாம் ஆனால் என்னிடம் சொல்லாமலேயே அந்த முத்தக் காட்சியை எடுத்து விட்டார்கள் அதுதான் உண்மை அதை சொல்லித்தானே ஆகவேண்டும் என கூறினார். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டி பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள் அவர்கள் கூறியதாவது கமலஹாசன் பாலச்சந்திரன் ஆகியோர் செய்தது மிகப் பெரிய தவறு படத்திற்க்கு தேவைப்பட்டாலும் நடிகையின் அனுமதியின்றி அவருக்கு முத்தமிடுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து பிரபல ஊடகத்துக்கு விளக்கம் அளித்த ரேகா இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்த கேள்வி என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது.

முத்த காட்சி எனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள் ஆனால் அந்த காட்சி எனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது தான், அவர் முத்தமிடும் காட்சியை என்னிடம் அனுமதி கேட்டு இருந்தால் நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த காட்சிக்கு பிறகு இனி கவனமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

Leave a Comment