தன்னை தரக்குறைவாக பேசிய நபர்களுக்கு வனிதாவின் வீடியோவை வெளியிட்டு தரமான பதிலடி கொடுத்த புகழ்.!

0

தமிழ் தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் சன் தொலைக்காட்சி நீண்ட காலமாக சீரியல்கள் மூலம் டி ஆர் பி இல் முதலிடத்தில் இருக்கிறார்கள். மேலும் சன் தொலைக்காட்சி டிஆர்பியை முறியடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய நிகழ்ச்சிகளையும் புதிய புதிய சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதிலும் சில தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோ லைவ் ஷோ என அட்டகாசம் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் அதில் ஒரு சில நிகழ்ச்சிதான் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது.

இந்தநிலையில் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது முதல் சீசனை விட 2வது சீசனுக்கு பலத்த எதிர்பார்ப்பு வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த நிகழ்ச்சிதான் டாப் ஷோவாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருவதற்கு முக்கிய காரணம் புகழ்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக தற்பொழுது புகழ் இருந்து வருகிறார். குக் வித் கோமாளி நாயகன் என்று சொல்லும் அளவிற்கு காமெடி மழையில் பொழிந்து தள்ளுகிறார். இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் அடிக்கடி வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் புகழ்  கண்டிப்பாக இடம்பிடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோ ரேஞ்சுக்கு புகழ் பேசப்பட்டு வருகிறார். மேலும் புகழ் எந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றாலும் ரொமான்ஸ் செய்வதுபோல் திரையில் காட்டப்பட்டு வருகிறது. அதனால் புகழ் அவர்களை வெறுக்கும் ஒரு கூட்டமும் உருவாகி வருகிறது. அந்த வகையில்  தன்னை வெறுக்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புகழ் தன்னைப்பற்றி வனிதா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வனிதா புகழ் குறித்து பேச புகழ் கண்டெட்டுக்காக தான் இவ்வளவும் செய்கிறான் என வெளிப்படையாக கூறியுள்ளார். அதேபோல் ஷூட்டிங் முடிந்தவுடன் அவர்கள் யாரென்று தெரியாததுபோல் சென்று விடுவான் எனவும் கூறியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.