மீண்டும் சீரியலில் களம் இறங்கிய தேவயானி.! வைரலாகும் புதிய ப்ரோமோ வீடியோ.!

வெள்ளித்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேவயானி இவர் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.

மேலும் இவர் வெள்ளித்திரையிலும் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் இறுதியாக நடித்த ராசாத்தி என்ற சீரியல் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது ஆனால் இவர் அந்த சீரியலில் ஒருசில எப்பிசோடுகள் மட்டுமே நடித்திருப்பார்.

இந்நிலையில் தேவயானி மீண்டும் ஒரு சீரியல் நெடுந்தொடர்களில் நடித்துள்ளார் ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதுப்புது அர்த்தங்கள் என்ற நெடுந்தொடரில் தேவயானி நடித்துள்ளார் மேலும் இந்த சீரியல் மார்ச் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து இந்த சீரியலின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் தேவயானி அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ.

https://youtu.be/qAvhtTa6fbk

Leave a Comment

Exit mobile version