ராஜகோபாலனால் பெயர் கேட்டு போன PSBB பள்ளி விவகாரம்.. மதுவந்திக்கு கோரிக்கை விட்ட ஜேம்ஸ் வசந்த்.

சமீபகாலமாக கொரோனா தொற்று நம்மை சுற்றி வளைத்து உள்ளது. இதனால் அனைத்து விதமான தொழில்களும் மூடப்பட்டன அதில் ஒன்று பள்ளி. இதனால் மாணவிகளின் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன்கிளாஸ் மூலம் படித்து வந்தனர் இதை தகாத முறையில் பயன்படுத்தி தனது சித்து வேலையை தொடர்ந்துள்ளார் சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைனில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதுகுறித்து சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தனது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வரும் ஜேம்ஸ் வசந்த் இந்த விவகாரம் குறித்து மதுவந்தி அவருக்கு தனது கோரிக்கையை விடுத்துள்ளார் அவர் கூறியது.

அன்புள்ள மதுவந்தி படித்த வசதியான ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்ல திறமையானவர் நீ உணர்ச்சிவசப்பட்டாமல் கொஞ்சம் நிதானித்து நம்மூர்ப்பக்கம் செல்கின்ற மொழிகளில் சொன்னால் கொஞ்சம் சூதனமாக இருந்திருந்தால் என் பாட்டியின் பள்ளியின் பெயர் கெட்டு போக விடமாட்டேன் என்று நீ நினைத்து போலவே ஒரு பிரச்சனை இல்லாமல் போயிருக்கும்.

எப்ப இப்படி ஒரு அசம்பாவிதமும் சில பெண் குழந்தைகளுக்கு உங்கள் பள்ளியில் நடந்து விட்டதோ உடனே அந்த குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தப் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவனை விடமாட்டேன் என்கின்ற துணியில் மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்து இந்த இக்கட்டான நேரத்தில் என்னுடனும் எங்கள் பள்ளியோடும் துணை நில்லுங்கள் இப்படி ஒரு தவறானவன் உள்ளே இருக்கிறான் அவன் செய்த தவறு அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன் இனி இப்படியே நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்கின்ற கோணத்தில் அணுகி இருந்தால் தமிழகமே கூட நின்று இருக்கும்.

அதை விட்டு விட்டு அவசர அவசரமாக தந்தையும் நீயும் கொடுத்த தொடர் பேட்டிகளினாலும் அதில் ஒலித்த உங்கள் தவறான தொனியினாலும் நாங்கள் பிராமணர் இந்துக்கள் போன்ற தேவையற்ற விஷயங்களை இதற்குள் கொண்டு வந்ததால் இப்போது என் தேன்கூட்டையே களைத்து போல ஆகிவிட்டது யாரைப் பற்றி எந்த அம்சத்தையும் இந்த சமூகம் விவாதிக்க வேண்டுமோ அவனை எல்லோரும் திட்டி தீர்க்க வேண்டுமோ அவனை நோக்கி எல்லார் கோபமும் திரும்ப வேண்டுமோ, அதையெல்லாம் வழியே உங்கள் தலை மீது நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டீர்கள்.

நீங்கள் ஊரெங்கும் அலைக்கழிக்கப்படுவீர்கள். இப்போதும் இதை இன்னும் அசிங்கப்படுத்தாமல், அலங்கோலப்படுத்தாமல் தேவையற்ற உயர்மட்ட உதவிகளை தேடி வெறித்தனமாக ஓடிக்கொண்டிராமல் கொஞ்சம் நிதானித்து மக்களிடம் கனிவுடன் பேசுங்கள் தவறு என்னுடையது நீங்கள் எதற்கும் அவமானப்பட வேண்டாம்.  அவரிடமிருந்து எட்ட நின்று அந்த குழந்தைகள் பெற்றோர்கள் மக்கள் பக்கம் நின்று சிந்தியுங்கள் உணர்ச்சிவசப்படாமல் இதை எளிமையாக கையாளுங்கள் என குறிப்பிட்டார்.

Leave a Comment

Exit mobile version