PS1 அதிரடி அப்டேட்டை வெளியிட்ட லைக்கா.! முதன் முறையாக இப்படி ஒரு புதுவிதம்..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட 22 கதாபாத்திரங்கள்  நடித்துள்ளனர்.

அதிலும் ஆதித்த கரிகாலன் ஆக விக்ரம் அவர்களும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வல்லவராயன் வந்தியதேவனாக  கார்த்தி, குந்தவை திரிஷா, பூங்குழலி ஐஸ்வர்யா, பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி அதே பெயருடன் திரைப்படத்தை அறிவித்திருந்தனர். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது என பல குழு அறிவித்துள்ளது.

மேலும் லைக்கா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் ஐ மேக்ஸ் இல் வெளியாகும் என தெரிவித்து இருக்கின்றனர். ஐமேக்ஸ் ஃபார்மட்டில் வெளியாகும் முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன் தான் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதனைத் தொடர்ந்து வரலாற்று திரைப்படமாக அமைந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதல் பாகம்  விரைவில் வெளியாகும் எனவும் அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மேலும் வலு சேர்க்க சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே பார்த்திபன் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது வரலாற்று புகழ் மிக்க நடிப்பை  வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version