சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

0

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பல திரைப்படங்கள் தற்போது உருவாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது அதனைத் தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் இந்த திரைப்படத்தை பற்றி தான் ரசிகர்கள் பல அறிவிப்புகளைக் கேட்டு வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியாக இருந்த இந்த திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து வெளியாகாமல் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி வழியாக தான் வெளியாகப் போகிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து  நடிகை பிரியங்கா அருள் மோகனன் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடையே தற்போது வரை பலத்த வரவேற்பை பெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தை தயாரிக்கும் கே ஜி ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் டாக்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது என்ன அப்டேட் என்பது பற்றி பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த அப்டேட்டுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என ஒரு சில ரசிகர்கள் கூறிவரும் நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.-