அஜித்தின் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்கிறார் ஆனால் அஜித்தோ போனி கபூருக்கு படம் நடித்து கொடுக்கிறார்.! மேடையில் விளாசிய பிரபலம்.!

‘புறநகர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, இந்த திரைப்படத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் நடித்துள்ளார் மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குனர் ஆர் வி உதயகுமார், மன்சூர் அலிகான், அபி சரவணன், ஜாகுவார் தங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் சில ரசிகர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள், சினிமாக்காரர் அரசை கண்டிப்பதும் பின்பு மன்னிப்பு கேட்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, அதேபோல் தயாரிப்பாளர்கள் பலகோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்குகிறார்கள்.

இவர்கள் எப்படி மக்கள் தலைவனாக இருக்க முடியும், நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, மக்கள் திலகம் எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள், ஆனால் ரஜினி முதலில் நடித்தது சிறு திரைப்படம் தான். அதே போல் சோழ பொன்னுரங்கம் தயாரிப்பாளர் அஜித்தை வைத்து முதன்முதலில் படமெடுத்தார், அமராவதி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

அமராவதி திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மிகவும் சிரமத்தில் இருக்கிறார் ஆனால் அஜித் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு படம் நடித்துக் கொடுக்கிறார், இதன் மூலம் சில கோடி வருமானம் சேரும், நடிகர்கள் தங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது, தன்னை அறிமுகப்படுத்தி கஷ்டத்தில் வாடும் அந்த தயாரிப்பாளருக்கு அஜித் படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவ்வாறு தயாரிப்பாளர் கே ராஜன் கூறினார்.

Leave a Comment