வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு பரிசு கொடு… சொகுசு காரை வழங்கிய தயாரிப்பாளர்..! இதோ புகைப்படம்.

நடிகர் சிம்பு அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார் ஐசரி கணேஷ் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார்.

இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், அப்புகுட்டி, neeraj madhav, kayadu lohar, siddhi idnani மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிளாஸ் ஆன படமாக இருந்தது.

இந்த படத்தில் சிம்பு ஒரு சின்ன பையனாக இருந்து மும்பை பக்கம் போய் மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்பதே படத்தின் கதை.. படம் அனைவருக்கும் ரொம்ப பிடித்துப் போனதால் நல்ல விமர்சனம் கிடைத்தது அதன் காரணமாகவே இந்த படம் ஆரம்பத்திலேயே நல்ல வசூலை தட்டி தூக்கியது.

30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது வருகின்ற நாட்களிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் சந்தோஷமடைந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு தொடர்ந்து பரிசு பொருட்களை கொடுத்து வருகிறார். முதலில் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு கொடுத்தார்.

simbu-
simbu-

அதனைத் தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் படத்தின் ஹீரோ சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை வழங்கி உள்ளார் அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கமலை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படி செய்தது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Leave a Comment