காலமானார் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். 86 வயதாகும் இவர் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் உயிர் நீத்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையின் காரணமாக மறைந்துள்ள அவருக்கு திரையுலகினரும் அரசியல் பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் பல குடும்ப படங்களை தயாரித்துள்ளது.

பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இந்த நிறுவனத்தின் மிகப்பெரும் பலமாக இருந்தது சரவணன் தான். ஆனால் பெரிய தயாரிப்பாளர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக இருப்பது தான் இவருடைய அடையாளம்.

தற்போது இவருடைய உடல் ஏ வி எம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவினால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு பிரபலங்கள் பொதுமக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.