மனதில் வைத்திருந்த பல நாள் உண்மையை புத்தகத்தின் மூலம் சொன்ன பிரியங்கா சோப்ரா.! இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.?

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட பத்து வயது குறைந்த ஆங்கில பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் அமெரிக்காவிலேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் .

பிரியங்கா சோப்ரா தற்போது சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி நடிக்காவிட்டாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் கோடிக்கணக்கில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவ்வபோது ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதுதான்.

பிரியங்கா சோப்ரா அண்மையில் மும்பையில் உள்ள தனது பங்களா வீட்டை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவருக்கு தனது வீட்டை 7 கோடிக்கு விற்றார்.

38 வயதாகும் பிரியங்கா சோப்ரா தற்பொழுது முற்றுப்பெறாத என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார் இதில் தன்னுடைய பழைய அனுபவங்களையும் குறித்து எழுதியிருக்கிறார்.

இதில் கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற சில நாட்களிலேயே சினிமாவில் நுழைந்ததாக கூறினார்.

இந்த சமயத்தில் மிக மோசமான சைனஸ் தொற்று ஏற்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக இருந்தது மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என எங்களிடம் கூறினார் உடனே ஆபரேஷன் செய்து கொண்டேன் ஒரு கட்டத்தில் ஆபரேஷன் செய்த கட்டிகளை அகற்ற வேண்டும் என கூறினர்.

கட்டுகளை அவிழ்த்து பார்த்தால் எனது உண்மையான மூக்கு போய்விட்டது நான் மனம் வருந்தினேன் உடனே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன்.

என்னைப் பார்த்து பலரும் கிண்டல் அடித்தனர், கேலியும் செய்தனர் அது என்னையும் எனது தொழிலான சினிமாவையும் பெரிதும் பாதித்தது.

மேலும் எங்கு சென்றாலும் இது பற்றி கேட்பதை ஊடகங்கள் வழக்கமாக வைத்து இருந்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டேன்.

ஒருகட்டத்தில் என்னை நானே சமாதானம் பண்ணிக் கொண்டேன் என கூறினார் பிரியங்கா சோப்ரா.