மலையாள நடிகைகள் தன் சொந்த மொழியில் வெற்றியை காணுகிறார்கள் இல்லையோ பிற மொழியை பக்கங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன், நயன்தாரா ஆகியோர்களை தொடர்ந்து தற்போது அடி எடுத்து வைத்து உள்ளவர்தான் பிரியங்கா அருள்மோகன் எடுத்த உடனேயே டாப் நடிகர் சிவகார்த்திகேயன் கைகோர்த்து டாக்டர் என்னும் படத்தில் நடித்தார்.
இவர் நடித்த முதல் படமே 100 கோடி கிளப்பில் இணைந்தால் இவரது பெயரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே உச்ச நட்சத்திரம் நடிகரான சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ரஜினியின் 169 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் கசிந்து வண்ணமே இருக்கின்றன. இப்படி தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து குறைந்த மாதங்களே ஆன நிலையில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் நடிகை பிரியங்கா அருள் மோகன் சினிமா வளர்ச்சி அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது.
இப்போது ரஜினியுடன் இவர் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அது நடக்கும் பட்சத்தில் பிரியங்கா அருள் மோகன் தொடமுடியாத ஒரு உச்சத்தை எட்டுவார் என இப்பொழுதே கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி 169 திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா நடிப்பார் என்று தகவல்கள் இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மகளாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க வில்லை என தகவல்கள் வெளிவருகின்றன.