விஜயின் பீஸ்ட் பட பாடலுக்கு கோமாளித்தனமாக ஆடிய பிரியங்கா மற்றும் மாகாபா.! அடேங்கப்பா என்ன ஆட்டம் இது என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.

விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவர் திரைப்படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் அடுத்து எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் நெல்சன் திலிப்குமர் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், யோகி பாபு, ஜான்விஜய், விடிவி கணேஷ், அபர்ணா, என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை பல பிரபலங்களும் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அதை சமூக வளைதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட் படப் பாடலான அரபி குத்து என்ற பாடலுக்கு தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் ஆகியோர்கள் கோமாளித்தனமாக நடனமாடுகிறார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரளாகி வருவது மட்டுமல்லாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment