வாங்க டோலி நீங்க இல்லாம ஷிவானி தர்ஷாலாம் ரொம்ப ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க. ப்ரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

0

priya bhavani shankar Latest stills : தமிழ் திரை உலகில் தற்பொழுத சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு நிகராக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடிக்கும் பொழுது தான் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து படிப்படியாக வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் பணியாற்றும்போது பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தவர் அதன் பிறகு தன்னுடைய திறமையான நடிப்பால் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார்.

தமிழில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார், இவரின் நடிப்பிற்கு மேலும் ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

அதன்பிறகு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்  இந்த திரைப்படத்தில் நடித்த பொழுது எஸ் ஜே சூர்யா உடன் கிசுகிசுவும் கிளம்பியது அதன் பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர் அருண் விஜய்யின் மாபியா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் இந்தியன்-2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது, அதுமட்டுமில்லாமல் புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில் பிரிய பவானி சங்கர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

இவர் வெளியிடும் புகைபடத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு கமெண்ட் செய்து வருவார்கள் ஆனால் சமீபகாலமாக இவர் புகைப்படத்தை வெளியிடுவதை குறைத்துக்கொண்டார், ஆனால் சமூகவலைதளத்தில் ஷிவானி, தர்ஷா ஆகியோர்கள் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரிய பவனி சங்கர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க இல்லாமல் சிவாணி மற்றும் தர்ஷா ஆட்டம் ஓவராக போய்க்கொண்டிரக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

priyabhavani-shankar
priyabhavani-shankar