பட்டுப் புடவையில் பார்ப்பதற்கு கல்யாணப் பெண் போல் தீபாவளி தினத்தில் போஸ் கொடுத்தா பிரியா பவானி சங்கர்.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

0
priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வயதானாலும் உடனே சின்னத்திரையில் கால்தடம் பதிப்பார்கள். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக பல நடிகைகள்  படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் என்பவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயந்தவர் தான்.

இவர் முதன்முதலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியலில் நடித்தது மிகவும் பிரபலம் அடைந்தார். அதாவது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி விட்டு அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்தார்.

இந்த செய்திகள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இதனைத்தொடர்ந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ் உடன் நடித்து வந்தார். தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது.

இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் மான்ஸ்டர் திரைப்படத்திலும், அருண் விஜய் அவர்களுடன் மாபியா முதல் பாகத்திலும் அதேபோல் டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரியலிலும் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பில் களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமன பெண்ணே ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது 2021 அதிக படங்களில் நடிக்கும் நடிகைகளின் லிஸ்டில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இவர் தன் கையில் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், யானை, ருத்ரன், பத்து தலை திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் வகையில் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வைப்பார்.

priya bhavani shankar
priya bhavani shankar

அந்த வகையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பட்டுப் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அம்மாவை போல் போஸ் கொடுத்துள்ளேன் என கமெண்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

priya bhavani shankar
priya bhavani shankar