நடிகை பிரியா வாரியர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளா புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா வாரியர். அந்த திரைப்படத்தில் அவரின் கண்சிமிட்டும் வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதனால் இந்தியா முழுவதும் பிரபலமானார் ஏன் உலகம் முழுவதும் என்று கூட சொல்லலாம். அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த கண்சிமிட்டல் வீடியோ மூலம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள், அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார் ப்ரியா வாரியர் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, ஏனென்றால் இந்த முறை நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
