இந்தியன்-2 படத்தை தொடர்ந்து மாஸ் முன்னணி நடிகருடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர்.!

0

நடிகர் விக்ரம் நடிக்கும் 58வது படத்தில் ப்ரியா பவானி சங்கர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்த நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த திரைப்படத்தை ராஜேஷ் எம் செல்வா தான் இயக்கியிருந்தார், இதனைத்தொடர்ந்து ‘டிமான்டி காலனி’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது, இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும்  படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது நடிகர் விக்ரம் நடிக்கும் 58வது படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, ப்ரியா பவானி சங்கர் ஏற்கனவே எஸ் ஜே சூர்யா உடன் ‘மான்ஸ்டர்’  திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது ‘மாபியா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன்-2’ திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.