சினிமாவில் சம்பாதிக்கிறது பத்தலையா.? தொழிலார்களின் முதுகில் குத்துறீங்களே.. பிரியா பவானிசங்கரை விளாசும் ரசிகர்கள்

0
priya-bhavani-shankar

ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகை. இவர் முதலில் புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

ஒருகட்டத்தில் வெள்ளித்திரை நடிக்க அழைப்பு கிடைத்தது. முதலில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது இன்னும் பிளஸ் ஆக மாறியது. அதன் பின் நடிகை ப்ரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர்..

மாபியா, களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.  தற்போதும் நடிகை பிரியா பவானி ஷங்கர்  பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. அவர் கைவசம் மட்டுமே பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது சினிமாவையும் தாண்டி மற்ற நடிகைகள் எப்படி வேறு தொழிலில் சம்பாதிக்கிறார்களோ அதே போல நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.

priya bhavani shankar
priya bhavani shankar

ஆம் அவர் சொந்தமாக ஒரு புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் விரைவில் திறக்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு தனது சமுகவளை தளப்பக்கதில் ரெஸ்டாரண்ட் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ரியா பவானி ஷங்கருக்கு வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர். ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர் சினிமாவில் சம்பாரிக்கிறது பத்தலையா ரெஸ்டாரண்ட்டை தொடங்கி சின்ன ஹோட்டல் வைத்து இருப்பவர்களின் முதுகில் குத்துறீங்களே.. என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்