செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தனது பணியைத் தொடர்ந்தவர் பிரிய பவனி சங்கர் இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மேயாதமான் திரைப் படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரின் முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன, இதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார்.
தற்பொழுது இவர் அதர்வா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் இதனைத்தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் மாபியா திரைப்படத்திலும், இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.








