தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் நடிகைகள் நடித்து வருகிறார்கள். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்ததாக சீரியல் பக்கம் செல்வார்கள் ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது அதாவது சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் கால் பதித்து வருகிறார்கள் அந்த வகையில் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், ஷிவானி நாராயணன் என பலரை கூறிக்கொண்டே செல்லலாம்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது இவர் கைவசம் அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அடிக்கடி அவரின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக் போட்டு வருகிறார்கள் இந்த நிலையில் சற்று முன் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீட்டிற்கு அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்று கூறி ப்ரியா பவானி சங்கரின் காதலர் அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் எனக்கு வயிறு எரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது என கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பல ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு வாழ்த்தி வருகிறார்கள்.
