பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவு கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர் – பாராட்டும் மக்கள்.!

பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்கின்ற மாணவி பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது ஆனால் பெற்றோர்கள் இதில் மர்மங்கள் அடங்கி இருக்கிறது என கூறி போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். அடுத்த நாள் மக்கள் போராட்டங்களை மிகப்பெரிய அளவில் நடத்தினர்.

இதன் மூலம் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள  கட்டிடங்கள் பஸ் கார் என அனைத்தையும் தீ வைத்து கொளுத்தினர். போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அவர்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் மகள் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நீதி கேட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதாக தெரிய வருகிறது. போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்ததால் தமிழ்நாட்டையும் தாண்டி பெரிய அளவில் இந்த போராட்டம் பேசப்பட்டது மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது அதாவது மாணவி  இரவு 10:30 மணிக்கு இறந்திருக்கலாம் என தோராயமாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் சில சந்தேகங்களும் எழுந்துள்ளது மாணவியின் மேல் உடை கீழ் பேண்ட் மேல் மற்றும் கீழ் உள்ளாடை இந்த நான்கு இடங்களிலும் ரத்தம் இருந்தது ரத்தம் எப்படி வந்தது.

அது கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்தமா அல்லது வேறு ஏதாவது காரணமாக என கேள்வி எழுப்பி உள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த உண்மை தகவல்களை கண்டுபிடிக்க பெற்றோர்கள் பள்ளி தரப்பிலிருந்து சிசிடிவி காட்சிகளை கேட்டது ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். ஸ்ரீமதி பள்ளியில் இறந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது ஆகின. இந்த நிலையில் தற்போது வேதியியல் ஆசிரியர் கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான சரியான உண்மையை கண்டுபிடிக்கும் வரை எங்கள் ஆதரவு ஸ்ரீமதிக்கு இருக்கும் என கூறி பலரும் போராட்டமும் நடத்தி வருகின்றனர் மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஸ்ரீமதி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஸ்ரீமதி புகைப்படத்தை வெளியிட்டு டேக் செய்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களாவது ஆதரவு கொடுத்தீர்களே பரவாயில்லை எனக் கூறி கமெண்ட் கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

sree-mathi-
sree-mathi-
sree-mathi-
sree-mathi-
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment