அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் செல்லத்தை.! ப்ரியா பவானி சங்கரை பார்த்து குமுறும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர், இவர் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார் படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் 90 வயது தாத்தாவாக நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் குஜராத்தி மொழியில் பேசி நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது அதற்காக கமலஹாசன் குஜராத் மொழியை ஓரளவு பேச பயிற்சி எடுத்து அந்த காட்சிகளில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே இளசுகளின் ஃபேவரட் ப்ரியா பவானி சங்கர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இந்தியன் படத்தில் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக நடிகை சுகன்யா வயதான வேடத்தில் நடித்திருந்தார் இவரது வேடத்தில் தான் தற்போது பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.

இதனைக்கேட்ட இளசுகள் பலரும் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் செல்லத்தை என குமுறுகிறார்களாம்.