படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய புதிய தொழிலை ஆரம்பித்துள்ள பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் வீடியோ..

0

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகிய நிலையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிய தொழிலை ஆரம்பித்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். செய்தி வாசிப்பாளராக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது அதன் பிறகு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் உடன் இணைந்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருந்தது. இதனை அடுத்து தற்பொழுது பிரியா பவானி சங்கர் ருத்ரன், பத்து தல, அகிலன் மற்றும் இந்தியன் 2 போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை அறிமுகப்படுத்திய நிலையில் ராஜவேல் மற்றும் பிரியா பவானி சாங்கர் இருவரும் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்து காதலித்து வருகிறார்கள்.

இவர்களுடைய புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து தன்னுடைய காதலை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து தற்பொழுது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்களது சொந்த உணவகம் இதுதான் எப்பொழுதும் எங்களது கவனமாக இருந்தது இந்த நாளை நெருங்குகையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம் உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கிறோம் லியாம் டினர் விரைவில் சேவை தொடங்கும்.

இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் கடந்த மாதம் புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு இவருக்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தன்னுடைய தொழிலையும் தொடங்கியுள்ளார் எனவே ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.