பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட வீடியோ.! வியக்கும் ரசிகர்கள்

0

செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தனது பணியைத் தொடர்ந்தவர் பிரிய பவனி சங்கர் இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மேயாதமான் திரைப் படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

priya-bhavani
priya-bhavani

இவரின் முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன, இதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது இவர் அதர்வா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் இதனைத்தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் மாபியா திரைப்படத்திலும், இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில்கூட ப்ரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் கவினும் காதலித்து பிரிந்துவிட்டதாக கிசுகிசு வெளியாகியது.

மேலும் உடல் எடையை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருவார் பிரியா பவானி சங்கர் இந்தநிலையில் 96 திரைப்படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கர் உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்தநிலையில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.