முன்பு எல்லாம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சீரியல் பக்கம் திரும்புவார்கள் அதுதான் காலங்காலமாக வழக்கமாக இருந்தது, ஆனால் சமீப காலமாக சின்னத்திரை சீரியலில் நடித்து விட்டு வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகள் அதிகரித்து உள்ளார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் பிரியா பவானி சங்கர், இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களையும் சீரியல் பக்கம் திரும்ப வைத்த நாயகி இவர்தான், தன்னுடைய பொலிவான அழகாலும், க்யூட்டான நடிப்பாலும் ஒட்டுமொத்த இளசுகளை கட்டிப்போட்டவர்.
இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி மான்ஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார்.
மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகிய பொழுது ப்ரியா பவானி ஷங்கருக்கு கிசுகிசு கிளம்பியது, இந்த நிலையில் தற்பொழுது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம் இந்தியன்2, பொம்மை, விஷாலுடன் ஒரு படம் என பல பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். எப்பொழுதும் சினிமாவில் சிக்கென இருக்கவேண்டுமென அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவார், இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் ஜிம் வொர்க் அவுட் உடையணிந்து கொண்டு வொர்க் அவுட் செய்துள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்டு இருக்கீங்களா என கமெண்ட் செய்து சங்கடப்பட வைத்துள்ளார்.