பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்.! வயசானாலும் உன்னோட அழகு அப்படியேதான் இருக்கு ரசிகர்கள் பதிவு

0
Priya-Bhavani-Shankar
Priya-Bhavani-Shankar

சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக பல்வேறு சேலஞ் வைரலாகி வருகிறது, சமீபத்தில் கூட பாட்டில் கேப் சேலஞ்ச் சமூகவலைதளத்தில் வைரல் ஆனது. தற்பொழுது பேஸ் ஆப் புதிய செயலி இணையதளத்தில்வைரலாகி வருகிறது, இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் இந்த செயலியை பயன்படுத்தி பல நட்சத்திரங்கள் தங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக பதிவிட்டு வருகிறார்கள், இந்த நிலையில் இந்த செயலியை நடிகை ப்ரியா பவானி சங்கர் பயன்படுத்தியுள்ளார், அந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தவர், அதன் பிறகு தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், அதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், இப்பொழுது கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததற்காக ப்ரியா பவானி சங்கர் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான் இந்த நிலையில் தற்போது தனது வயதான தோற்றத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.