அமுல் பேபி போல் இருக்கும் தனது காதலருடன் டேட்டிங் சென்ற பிரியா பவானி சங்கர்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக சீரியலில் நடித்து வரும் நடிகைகள் சினிமாவில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர் இவர் முதன்முதலில் செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றியவர்.

அதன்பிறகு 2015ஆம் ஆண்டு ஜோடி நம்பர் 1 கலந்து கொண்டார், ஏர்டெல் சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் பின்பு வெள்ளித்திரையில் முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது. பின்பு 2018 ஆம் ஆண்டு  கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் மான்ஸ்டர் திரைப்படத்தில் ஜெய் சூர்யா அவர்களுக்கு ஜோடியாகவும், மாபியா திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.  அதன் பிறகு சமீபத்தில் வெளியாகிய களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

priya bhavani shankar
priya bhavani shankar

தற்பொழுது பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, பொம்மை இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட இவர் தற்பொழுது அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலருடன் டேட்டிங் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் வெளியீட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இதோ அந்த புகைப்படங்கள்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar

Leave a Comment