ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்.! அதுவும் முன்னணி இயக்குனர் படத்தில் இப்படி ஒரு வாய்ப்பா

0

நடிகை ப்ரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர், பொதுவாக சின்னத்திரையில் இருந்து வந்த நாயகிகள் கதாநாயகியாக ஜெயித்தவர்கள் என்றால் ஒரு சில பேர் மட்டும் தான் அந்த வகையில் ப்ரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்திலிருந்து மான்ஸ்டர் திரைப்படம் வரை இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும வெற்றி பெற்று வருகின்றன, மான்ஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தை இயக்க முடிவு எடுத்து இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது, இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் மீண்டும் திரைப்படத்தை தொடங்க இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

பல நடிகைகளுக்கு முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து திடீரென ப்ரியா பவானி சங்கருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதால் அவர் அதிர்ஷ்டசாலி என கூறப்படுகிறார் அனைவராலும்.