பீச்சில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்திய ப்ரியா பவானி சங்கர் வைரலாகும் புகைப்படம்

0
Priya Bhavani Shankar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர், அதன்பிறகு ஜோடி நம்பர் ஒன், ஏர்டெல் சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் விஜய் தொலைக்காட்சியில்.

2017 ஆம் ஆண்டு வைபவ் நடித்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், அதன் பிறகு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் மான்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் கையில் அரை டஜன் திரைப்படங்களில் இருக்கின்றன குருதி ஆட்டம், வான், ஜீவா அருள்நிதி பிலிம், கசடதபற, மாபியா, இந்தியன் 2 எனப் பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் பீச்சில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.