செவனேன்னு இருந்த பிரியா பவானி சங்கரை கமெண்ட் செய்து வம்பிழுத்த ரசிகர்கள்.! கொதித்தெழுந்து வெளியிட்ட பதிவு

0

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கி அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் வைபவ் மற்றும் பிரிய பவனி சங்கர் இவர்களுடைய நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மேயாத மான். இத்திரைப்படத்தின் மூலம் பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்தநிலையில் தற்போது இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷ், முன்னணி நடிகர் அசோக்செல்வன் உட்பட இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் .

இதனை அறிந்த ரசிகர் ஒருவர் குறிப்பிட்ட கட்சியின் பெயரைச்சொல்லி இந்த அனைத்துக் கட்சிகளுக்கும் ஜால்ரா தற்றிங்க என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர் நடிகைக்கு முன்பு நான் ஒரு ஜர்னலிஸ்ட் என்று கூறியிருந்தார்.

இருந்தாலும் அந்த ஒரு நபர் பிரியா பவானி சங்கரின் பழைய பதிவுகளை தேடி பிரியா பவானி சங்கரிடம் மீண்டும் பல கேள்விகளை கேட்டு வந்தார். எனவே கோபமடைந்த பிரியா பவானி சங்கர் உன் முட்டாள்தனமான கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று கூறி உள்ளார்.