தனது காதல் கணவருடன் செம ரொமான்டிக்காக திருமண நாளை கொண்டாடிய பிரியா அட்லி. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு முன்னணி இயக்குனருக்கான இடத்தை  துண்டு போட்டு பிடித்தவர் அட்லி, இவர் முதன்முதலில் ஷங்கரின் உதவி இயக்குனராக தான் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா, ஜெய் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய தெறி திரைப்படத்தை இயக்கினார், அதுமட்டுமில்லாமல் மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகளில் இவர்களும் ஒருவர், சமீபத்தில்கூட பிரிய அட்லீ கர்ப்பமாக இருக்கிறார் என்று வதந்திகள் சமூகவலைதளத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த ஜோடி தங்களின் ஆறாவது வருட திருமண நாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

ப்ரியா மற்றும் அட்லி ரொமான்ஸ் செய்து கொண்டு தங்களுடைய திருமண நாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment