atlee-priya: இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் மிக வேகமாக முன்னணி இயக்குனர்களின் இடத்தை பிடித்து விட்டார். இவர் தற்பொழுது விஜயை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது, அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவர்கள் இருவரும் எங்கேயாவது சுற்றுலா சென்றால் அங்கு புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

