லியோ பட நடிகை “ப்ரியா ஆனந்தின்” சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? ஷாக்கான ரசிகர்கள்

Priya Anand : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இவர் படிக்கும் போதே  மாடலிங்கில் அதிகம் ஆர்வம் காட்டினார் ஒரு சில விளம்பர படங்களில் கூட நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த் 2009 ஆம் ஆண்டு வாமனன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகுதெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தலை காட்டி ஓடிக் கொண்டிருந்தாலும் தமிழில் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தமிழில் இவர் நடித்த 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்புக் குதிரை, வை ராஜா வை, த்ரிஷா இல்ல நயன்தாரா, எல் கே ஜி, ஆதித்யா வர்மா போன்ற படங்கள் வெற்றியை பெற்றன.

இப்படிப்பட்ட நடிகை  பிரியா ஆனந்துக்கு 2023 ஆம் ஆண்டு ஆண்டு அமைந்துள்ளது கைவசம் மட்டுமே நான்கு படங்கள் வைத்திருக்கிறார் அதில் பிரசாந்தின் அந்தகன், விஜயின் லியோ, சுமோ மற்றும் தெலுங்கில் ஒரு படமும் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பெரிதும் விஜயின் லியோ படத்தை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நேற்று ப்ரியா ஆனந்த் தனது 37 வது பிறந்தநாள் வெகு விமர்சியாக கொண்டாடினார் இந்த நிலையில் பிரியா ஆனந்த் சேர்ந்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 11 கோடி இருக்கும் என கூறப்படுகிறது தற்போது ஒரு படத்திற்கு சுமார் 80 லட்சம் வாங்குவதாக தகவல்கள் வெளி வருகின்றன. பல விலை உயர்ந்த சொகுசு காரர்களையும் ப்ரியா ஆனந்த் வைத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

priya anand
priya anand