ஆசை கணவருக்கு முத்தமிட்ட பிரியா அட்லி.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் எப்பொழுதாவது யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கும் அந்த வகையில் ஷங்கர் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னாட்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வெகுவிரைவிலேயே உச்சத்தை தொட்டுப் பார்த்தவர் இயக்குனர் அட்லி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யாவை வைத்து ராஜாராணி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார். அதன் காரணமாக தளபதி விஜயின் படங்களை தொடர்ந்து கைபற்றிய தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டார் இவர் தொடர்ந்து மெர்சல், பிகில், தெறி ஆகிய படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்தியில் ஷாருக்கான் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அது என்ன காரணம் என்று தெரியவில்லை அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

இருப்பினும் தனது மனைவியுடன் பொழுதை கழிப்பதை மட்டும் தவறாமல் செய்து வருகிறார் இயக்குனர் அட்லியை திருமணம் செய்து கொண்ட பின் அவரது மனைவி நடிக்கவில்லை என்றாலும் அவர் படங்கள் தயாரிக்கும் அட்லீ இடத்திற்கு எல்லாம் கூட்டிக் கொண்ட செல்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லீ இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவரை பின்பற்றி தொடர்கின்றனர்.

இதனால் வெளியீடும் ஒவ்வொரு புகைப்படங்கள், வீடியோக்கள் வேற லெவல் லைக்குகளை குவிகின்றன அப்படியிருக்க தற்போது தனது ஆசை கணவர் அட்லீயிடம் முத்தம் கொடுத்த க்யூட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கேப்ஷனாக பதிவை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளார் அதில் அவர் இன்று ஒரு இனிய நாள் என்றும் குறிப்பிடார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

Leave a Comment

Exit mobile version