கொரோனா வைரசால் லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.! கண்டனத்தை தெரிவிக்கும் மக்கள்.! அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா.?

0

கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலகை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பு மற்ற நாடுகளை  இந்தியாவில்அதிகமாகி வருகிறது இதனை முன்னிட்டு இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கொரோனா என்ற நோயின் பரவலை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது ஏனென்றால் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வெளியில் செல்லும் போது இது போன்ற அபாயங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்க பட்ட மக்கள்  தனியார் மருத்துவமனைகளை நாடுவாதால் அதனை சரியாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருகின்றனர் தனியார் மருத்துவமனைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் நிரம்பி வருவதால் உயிரை காக்க மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர் இதனை தற்போது லாபம் பார்க்கும் வகையில் கொரோனவைராசல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பார்க்க பல லட்சம் ரூபாயை வசூல் செய்கிறது.இந்த நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று கோரோனவுக்காக தனியார் மருத்துவமனை எவ்வளவு பணம் வாங்குகிறார் என்பதை வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியுள்ளது.

இதனை அறிந்த பொதுமக்கள் தமிழக அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என பல கேள்விகளை எழுப்பினர் இதுகுறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் கேட்டபொழுது தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று நாளை அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கூறியுள்ளார்