கைதி இரண்டாம் பாகம் ரெடியாகிறது.? இத்தனை நாள் ஷூட்டிங் போன போதுமாம்.? வெளியே கசிந்த தகவல்.

சினிமா உலகில் மக்களை கவர்ந்த ஒரு திரைப்படமும் பிறமொழி மக்களை கவரும் என்ற நம்பிக்கையில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன அதுவும் வெற்றிகரமாக நடந்து அரங்கேறி உள்ளது அந்த காரணத்தினால் தமிழ் மொழியில் ஹிட்டடித்த பல்வேறு திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் அல்லது இந்த மூலிகை ஏற்றமாதிரி  டப் செய்யப்பட்டு வெளியாகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி இந்த திரைப்படத்தில் ஒரு பாடல்கள் இல்லாமல் இருந்தாலும் படம் விறுவிறுப்பாக இருந்ததால் இந்தப் படம் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.

இப்போ கைதி திரைப்படம் தற்போது ஜப்பான் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெகுவிரைவிலேயே திரையரங்கில் ரிலீசாக இருக்கிறது. ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்தப் படம் முதல் பாகம் அப்படியே முடிந்து விடாமல் இரண்டாம் பாகம் எடுப்பது போன்ற கடைசியில் கூறப்பட்டது.

அதனால் ரசிகர்கள் கைதி இரண்டாம் பாகத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் முதல் படம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான வேலையை நாங்கள் தொடங்கி விட்டோம் இன்னும் 30 நாட்கள் படத்தை எடுத்தால் போதும் இரண்டாம் பாகம் உருவாகி விடும் என கூறியிருந்தார்.

ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் தான் இருக்கிறது அது போல கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தை முடித்துவிட்டால் இருவரும் இணைந்து கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என தெரியவருகிறது.

Leave a Comment