சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயின்னாக இந்த படத்தில் நடித்தார். இவர் ஒரு மாடல் அழகி கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த படத்தை பார்த்தனர் ஏனென்றால் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த இரண்டு மூன்று படங்கள் வெற்றி படங்களாக மாறியதால்..

இந்த படத்தை பெரிய அளவில் பார்க்க ஆர்வம் காட்டினார் ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் கலவையான விமர்சனத்தை கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 6 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை.. இருப்பினும் வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பிரின்ஸ் படம் வெளிவருவதற்கு முன்பாகவே 50 கோடி வரை கிட்டத்தட்ட டேபிள் பிராஃபிட் பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment