ரிலீசுக்கு முன்பே கோடி கணக்கில் காசு பார்க்கும் பிரின்ஸ்.. உச்சகட்ட சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்.!

0
sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் டான் டாக்டர் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கையில் அனுதீப்  இயக்கத்தில் பிரின்ஸ், அயலான், மாவீரன் என பல்வேறு படங்கள் இருக்கின்றன ஆனால் ரசிகர்கள் தற்பொழுது பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருப்பது பிரின்ஸ் திரைப்படம் தான்.

இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன், வெளிநாட்டு ஹீரோயின் மரியா உட்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க கதைப்படி விடுதலைப் போராட்ட வீரராக இருக்கும் சத்யராஜ் ஆங்கிலேயர்களை வெறுத்து ஒதுங்குவார்..

அவருடைய மகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் வெள்ளைக்கார பெண்ணை விரும்புவார். இதனால் குடும்பத்திற்குள் நடக்கும் சுவாரஸ்யமான காமெடி கலாட்டாக்கள் தான் பிரின்ஸ் படம். வழக்கம்போல சிவகார்த்திகேயன் படங்கள் எப்படி குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்க்கப்படுகிறார்களோ அதே போல இந்த படமும் இருக்கும் என தெரிய வருகிறது.

இந்த படம் காமெடி படம் அதேசமயம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகுவதால் முதல் நாளே பிரம்மாண்டமான வசூலை அள்ளும் என தெரிய வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் சத்யராஜ் எனக்கு நெருக்கமாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு பேசப்பட்டு உள்ளதாம். இதனால் ரிலீஸுக்கு முன்பு மிகப்பெரிய ஒரு லாபத்தை படம் பார்க்க இருக்கிறது மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் 100 கோடி லாபம் பார்க்கும் என சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.