நகைச்சுவையில் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் பிரேம்ஜியின் ‘சத்திய சோதனை’ பட டிரைலர்.!

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த பிரேம்ஜி தற்பொழுது எல்லாம் சில திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தற்பொழுது சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

எனவே இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெறியாகி இருக்கும் நிலையில் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சத்திய சோதனை படத்தில் பிரேம்ஜி அமரன், பிக்பாஸ் ரேஷ்மா, கேஜி மோகன், செல்வம் முருகன், லட்சுமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இவர்களை அடுத்து இந்த படத்தினை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கி உள்ளார்.

சுரேஷ் சங்கையா இதற்கு முன்பு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தினை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரகுராம் இசை அமைக்க, சரண் ஒளிப்பதிவில், வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலரில் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற பிரேம்ஜி காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.

எனவே அங்கிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதனை நகைச்சுவையாக இந்த படத்தின் கதை மூலம் கூறியுள்ளனர். நகைச்சுவையான படமாக இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் அமைந்திருக்கிறது எனவே இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment