மேடம் இது நடிப்பு மேடம்… இப்படி தான் 5 வருஷமா சொல்லிட்டு ஊர சுத்துராரு.. வைரலாகும் பிரேம்ஜி போட்ட ட்வீட்..

Premgi Amaren : கங்கை அமரன் மகன்தான் பிரேம்ஜி இவர் நடிகர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் முதன் முதலில் புன்னகை பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் ஆனாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் வல்லவன், வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்திருப்பார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சென்னை 600028, மங்காத்தா, சந்தோஷ் சுப்பிரமணியம், சரோஜா, பிரியாணி, மாநாடு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே கண்டிப்பாக பிரேம்ஜி இருப்பார். அந்த வகையில் தற்பொழுது தளபதி 68 திரைப்படத்திலும் இணைந்துள்ளார் பிரேம்ஜி.

மேலும் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் சத்திய சோதனை ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு பிறகு தான் சத்திய சோதனை படத்தை சுரேஷ் கங்கையா இயக்கியிருந்தார் சத்திய சோதனை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதன் பிறகு பெரிதாக கதாநாயகனாக பிரேம்ஜி நடிக்க வில்லை. மேலும் 2024 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு என்பதால் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதிலும் சினிமா பிரபலங்கள் பலரும் பார்ட்டி பப் டான்ஸ் மது என கோலாகலமாக இருந்து வந்தார்கள்.

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி அவர்கள் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தை வித்தியாசமாக கூறியுள்ளார் அதாவது தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு இந்த ஆண்டு எனக்கு திருமணம் என்று பதிவு செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள். பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு ரசிகர் நீங்கள் இந்த ட்வீட் போட்டதும் பூகம்பம் வந்துவிட்டது எனவும் மேலும் ஒருவர் மேடம் இது அம்புட்டும் நடிப்பு மேடம் இப்படி தான் 5 வருஷமா சொல்லிக்கிட்டு ஊர சுத்துறாரு என கலாய்த்து தள்ளுகிறார்கள்.