பிரேமம் பட இயக்குனருக்கு பாடம் சொல்லித்தரபோகும் உலக நாயகன் கமல்ஹாசன்.? காரணம் இந்த படம் தான்.?

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தது. ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திலும் புதியதை பயன்படுத்தி  சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  நகர்த்தினார்.

கமல் அவரது நடிக்கும் படங்களாக இருந்தாலும் சரி, இயக்கம் படங்களாக இருந்தாலும் சரி அதில் நாம் புதியவை பார்க்க முடிந்தது அந்த வகையில் தசாவதாரம் படம் வேற லெவலில் இருந்தது. இந்தப் படம் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் எடுக்கப்படாத அளவிற்கு வித்தியாசமான கதைக் களமாக இருந்ததோடு மட்டுமில்லாமல் இதில் பலவிதமான கெட்டப்புகளில் அசத்திருந்தார். இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படம் வெளிவந்து இதுவரை 13 ஆண்டுகள் நிறைவடைந்தது.

தசாவதாரம் படத்தின் ஞாபகமாக பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்திருந்தார் இதைப் பார்த்த பலரும் வாழ்த்து சொல்லி வந்த நிலையில் மலையாளத்தில் பிரேமம் படத்தை எடுத்த அல்போன்ஸ் புத்திரன்.

தசாவதாரம் படத்திற்கு வாழ்த்து சொல்லி சில கேள்விகளை கமலிடம் முன்வைத்தார். அவர் கேட்டது படம் இயக்குவதில் தசாவதாரம் பிஹெச்டி என்றால் மைக்கேல் மதன காமராஜ் படம் ஒரு டிகிரி போன்றது என குறிப்பிட்ட அவர் மேலும் மைக்கேல் மதன காமராஜ் படத்தை எப்படி எடுத்தீர்கள் என கேட்டதற்கு நேற்று பதிலளித்த கமல்.

நன்றி அல்போன்ஸ் புத்திரன் நீங்கள் கேட்டது சரியான ஒன்று. இந்த படம் ஒரு மாஸ்டர் கிளாஸ் படம் இந்த படம் அப்பொழுது வெளிவந்து பல நாட்கள் ஓடியது மேலும் இன்று வரையிலும் இந்த படத்தை பற்றி கேட்டு வருகின்றனர். இந்த படம் குறித்து விரைவில் நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன் இது எப்படி உங்களுக்கு புரியும் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment