தமிழ் சினிமாவில் கிராமிய பாடல், சினிமா பாடல்கள் பாடி பிரபலமடைந்தவர் நடிகை பரவை முனியம்மா. இவர் 2003 ஆம் ஆண்டு முன்னணி நடிகரான விக்ரம் நடித்து வெளிவந்த தூள் என்ற திரைப்படத்தில் ”ஏய் சிங்கம் போல கடந்த வாரம் செல்ல பேராண்டி” என்ற பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர் பரவை முனியம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இப்படம் அவருக்கு முதல் படமாகவும். முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து அவர் தேவதையை கண்டேன், சண்டை, தோரணை, தமிழ் படம் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதுவரை பரவை முனியம்மா அவர்கள் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரவை முனியம்மா அவர்கள் 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே என்ற திரைப்படத்தில் ராயபுரம் பீட்டர் என்ற பாடலை பாடி நடனமாடி அசத்தினார்.
இதை தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த பரவை முனியம்மா அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார் இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பரவை முனியம்மா அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.