கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து ஒன்றாக நடிக்க இருக்கிறார்கள் பிரசன்னா மற்றும் கனிகா. பொதுவாக பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பது வழக்கம் ஆனால் கனிகா மற்றும் பிரசன்னா இருவரும் இது கொஞ்சம் ஸ்பெஷல் என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் இருவருமே 2002ஆம் ஆண்டு வெளிவந்த பைஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரசன்னா மற்றும் கனிகா இருவரும் சினிமாவிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து விட்டார்கள். தற்போது 19 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வெப் சீரியலில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை கனிகாவும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் அஜித்துடன் வரலாறு, விஜய்சேதுபதியுடன் லாபம், இயக்குனர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். இவ்வாறு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் தரமான வெப் சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே இவர்களின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமான பைஸ்டார் மிகவும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது மீண்டும் இவர்களின் நடிப்பில் வெளிவரும் வெப் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் கனிகா பிரசன்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
