புலம்பெயரும் தொழிலார்களுக்கு சத்தமே இல்லாமல் உதவி வரும் பிரகாஷ் ராஜ்.!!

0

Prakash Raj comes to the aid of migrant workers: பிரகாஷ்ராஜ் இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1994 ஆண்டு வெளியான டூயட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமா துறையில் பெரும் அளவில் பேசப்பட்டார். எனவே அதன் நினைவாக அவரின் தயாரிப்பு கம்பெனிக்கு டூயட் மூவிஸ் என பெயர் வைத்தார்.

இதனைதொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வலம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் 1998 ஆம் ஆண்டு இருவர் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். மேலும் இவர் 2007 ஆம் ஆண்டு காஞ்சிவரம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்து சொந்த ஊருக்கு நடந்து பல நூறு கிலோ மீட்டர்கள் செல்லும் மக்களுக்கு அவர் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். மேலும் இவர் 44 நாட்களாக அவரது பண்ணை வீட்டில் தங்க இடம் கொடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நான் பிச்சை எடுக்கிறேனோ அல்லது கடன் வாங்குகிறேனோ, ஆனால் என்னால் இயன்ற வரை என்னை கடந்து செல்லும் என் சக மனிதனுக்கு நான் உதவிக்கொண்டே இருப்பேன். அவர்கள் எனக்கு திரும்ப கைமாறு செய்யாமல் போகலாம், ஆனால் அவரகள் தங்கள் இல்லத்தை அடையும்போது, நாங்கள் வரும் வழியில் நாங்கள் தளர்வடைந்தபோது ஒருவன் எங்களுக்கு உதவினான் என்று அவர்கள் நினைவுகூர்வதே எனக்கு போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நாளிலிருந்து தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.